வெள்ளி, 20 நவம்பர், 2009

இம்சைராசா:

 உன் மௌனம்
என் மரணத்தின்
நிகழ்கால
ஒப்பாரி...
**

இத்தனை
வருடமாய்
கற்றுக் கொண்ட
என் வாழ்க்கை
ஒற்றை நொடியில்
முடியும் முன்...
நீ
காதலிக்கக்
கற்று கொள் !
**

வார்த்தைகளில்
அடக்க முடியாத
என் வாழ்க்கையினை
உன் மௌனத்தில்
அடக்கி விடுகிறாய் ......
**

நீ என்
கனவில் வந்தாய்
விடியம்
எழும்பிப் பார்த்தேன்
என் கட்டில்
நிரம்ப
கவிதை
நிரம்பிக்
கிடந்தது
**

இத்தனை
வருடமாய்
நான் பிறந்து
கொண்டிருந்தேன்
நீ பார்த்த
போதுதான்
என் பிறப்பு
முற்றுப் பெற்று
வாழத்
தொடங்கினேன்...
**

இனிமே உன் வாழ்க்கை டாஸ்மாக்லயும் பார்க் பெஞ்சிலும் தான் மாமு.....

இரவு வணக்கம்.

மக்கள் கவிஞர்.சுட்டபழம்.

கவிதை உதவி. மயாதி