இனித்திடும் என் தேசம்
என் தேசமே
என் தாயாகமே-உன்னை
ஏங்கித் தவிக்கிறது
என் மனது
நான் முதல் முகலாய்
நடை பயின்றது-உன்
முத்து மேனியிலே
ஆசை ஆசையாய்
உன்னை அள்ளி உண்டு
உன் மேனியெங்கும்
உருண்டு புரண்டு-அப்பப்பா
எத்தனை கூத்துக்கள் கும்மாளங்கள்
எதனை அசைபோட
புளுதி மணல், பூவரசம் நிழல்
கொழுத்தும் வெயில்,
கோவில் மணியோசை
செம்புளுதி பூசிவரும்
பேரூந்துகள்.
ஏர் பிடிக்க
உழன்று வரும் காளைகள்
சேற்றுக்கள் நாற்று நடும்
சேலையர்கள்
வசந்த கீதம் பாடி
வருடிச் செல்லும் தென்றல்
ஆகா-நினைத்தாலே
இனிக்கும் என் தேசம்.
ஜீவனுள்ள காலம் வரை
ஜீரணிக்க முடியாத
நினைவுகளோடு......
தாய் மண்ணே!
உன்னை விட்டு பிரியும் வேளை
எம்முயிரை மட்டும் நினைத்தோம்.
நாம் வெல்வதற்கென்றெ
எம் காலடியில் கிடந்த
உன்னை............?
எம்மவர் குருதியில் குழித்தாய்
எத்தனை உடலங்கள் சுமந்தாய்
எம்மினத்தின் அவலக்குரல்கள்...
எமக்கான வலிகள் நீ சுமந்தாய்
எம் தேசம் விட்டு
பிரிந்த நாள் முதலாய்
இன்றும் கொடுமைகள் சுமக்கின்றேன்.
பொறுமையின் சிகரமே
பொறுத்திரு-எம்
தியாகங்கள் அர்த்தமற்றுப்போகாது
எங்கெங்கு வாழ்ந்தாலும்
என் ம்ண்ணே
என் கண் முன்.
...................................
......................
சுதந்திரம் தேடி ஓடுகின்றோம்!
சரித்திர புருசகர்களின் படங்களையும்
கதைகளையும் நாவல்களிலும்
திரைப்படங்களிலும் வாசித்தும்
பார்த்தும் வாழ்ந்த தமிழர்- நிய
வாழ்விலொரு உலகத்தின் முன்னிலையில்
தமிழர்களின் தலைவனோடு வாழ்ந்தோமெனச்
சொன்னாலது முப்படைகளின் நாயகன்- தமிழ்
செல்வங்களின் பாதுகாவலன் அதிபதித்தமிழன்
வேலுப்பிள்ளையின் கடப்பிள்ளை பிரபாகரனே தான்!
விதியோடு விளையாடிய விழியே...
வீரப் புலியோடு களம் கண்ட கதிரே...
உலகிற்கு தழிழ் மொழி காட்டிய குருவே...
எம் இனத்திற்கு தமிழ் ஈழம் காட்டிய உயிரே...
தமிழ் மானம் காத்த தங்கத் தலைவா_ உன்
பாதம் பட்ட தாய் மண்ணிற்கு...
பல்லாயிரம் முத்தங்கள் சமர்ப்பணம்.
உன் வழி தனை ஒளியாய் மாற்றிட
தீப்பொறியாய் மாறிய மா... வீரர்களே...
தலை வணங்குகின்றோம் ஈழத்தமிழர் நாம்.
முப்பது ஆண்டுகள் மேல் உன் அனுபவம் கண்டு
முன் நகர்வை முறியடிக்காத இலங்கை அரசு
வல்லரசுடன் கை கோர்ப்பது நியாயமா...?
முகவரி ஒன்று முழுமையாய்க் கிடைக்க...
முப்படைக்கும் முகம் கொடுக்கும் தம்பி கரிகாலனே...
தலை வணங்குகின்றோம் உலகத்தமிழர் நாம்.
வயதொன்று உன்னைக் கடந்தாலும்
வாழிப காலத்தில் வடித்த இலட்சியங்கள்...
நனவாகும் நேரமிது
தமிழீழத் தாகம் தணிய...
தன் மானத் தமிழர் நாம்
தலை நிமிர்ந்து வருகின்றோம் போராட.
உள்ளததால் உயர்ந்த மனிதன் நீ...
உருவாக்குவதில் இயந்திர மனிதன் நீ...
மானம் காக்கும் மறத் தமிழன் நீ...
மதங்கள் போற்றும் மானத் தமிழன் நீ...
காலத்தால் அழியாத அதிசய மனிதன் நீ...
கரிகாலக் கடவுளாய் அவதார மானிடன் நீ...
உலகம் உன்னைக் கண்டு அச்சம்.
உனக்கு இருக்கிறது ஏதோ மச்சம்.
பார்வையால் பலி எடுத்தாய் துரோகியை
கூர்மையால் படுகுழியில் வீழ்த்தினாய் எதிரியை
நேர்மையால் வளைத்துப் பிடித்தாய் தமிழரை _ எம்
நெஞ்சம் ஒருபோதும் மறவாது எம் தங்கத் தலைவரை.......
அறத்தினை வெறுக்கில் ! மறத்தினைப் பொறுக்கிலீர் !
தாய் திருநாட்டைச் சந்தம் போற்றிப்
புகழொடு வாழ் மின் ! புகழொடு வாழ் மின் !
வாழ்க தமிழீழத்தின் தேசியத் தலைவர் நாமம் வாழ்க வாழ்கவே !!!