புதன், 11 நவம்பர், 2009

இமலாதித்தன் பாலாஜி

தமிழன் இல்லாத நாடே இல்லை...ஆனால்...தமிழனுக்கென்று ஒரு நாடு இல்லை...
நானும் ஒரு வலைப்பதிவு வச்சிருக்கேன்.அதற்கான சுட்டி: http://www.tamilvaasal.blogspot.com/
முடி
ஞ்சா பாருங்க...
--------------------------------------------------------------------------
நான் தமிழன் என்று பெருமையாய் சொல்வதை தவிர என்னை பற்றி பெரிதாய் ஒன்றும் இல்லாததால்...............
----------------------------------------------------------------------------
உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே - சேகுவேரா
----------------------------------------------------------------------------
நாம் எந்த ஆயுததை எடுப்பது என்பதை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள் - மாவோ
----------------------------------------------------------------------------
நீ கவலைகளைச் சுமந்து கண்ணீர் சிந்துவதை விட, இலட்சியங்களைச் சுமந்து இரத்தம் சிந்து, உலகம் உன்னைப் போற்றும்.

பாதையை தேடாதே....... உருவாக்கு - லெனின்
--------------------------------------------------------------------------
கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும் - விவேகானந்தர்
--------------------------------------------------------------------------
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது - லெனின்
------------------------------------------------------------------------
வீரமற்ற விவேகம் கோழைத்தனம்
விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்

தேசியமும் தெய்வீகமும் நம் இரு கண்களாக இருக்க வேண்டும் - தேவர்
-------------------------------------------------------------------------
தோல்வியிலிருந்து நாம் தவறுகளை திருத்திகொண்டால் தோல்வியும் வெற்றிதான்
-மல்கொல்ம் போர்ப்ஸ்
--------------------------------------------------------------------
போரின் முடிவென்பது
இனத்தின் முடிவல்ல
எந்த இரவுக்குள்ளும்
பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்
இனம் புதைக்கப்படுவதில்லை
அழிந்தது போலிருக்கும் அருகம்புல்
ஆனால்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே
சிந்திய துளிகள்
சிவப்பு விதைகள்
ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்
பீரங்கி ஓசையில்
தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்
ஈழப்பனை மரத்தில்
என்றேனும் கூடுகட்டும்!
- வைரமுத்து
-----------------------------------------------------------------------
ஈழ தமிழனுக்காய் எனது வரிகள் (அக்டோபர் 15, 2008 அன்று எழுதியது)

தோழா
என்று
அழைக்கத்தான்
ஆசைபடுகிறேன்...

நீ தோல் கொடுப்பாயென
நினைத்தால்
முதுகில் அல்லவா
குத்துகிறாய்...

ராணுவ தடவாளங்களை
கடன் வாங்கினாய்
தமிழர் பகுதிகளை
கலவர பூமியாக்க...

இப்போது
பூவனத்தையும்
கல்லறைதோட்டமாக்கிவிட்டாய்....
இங்கு பூத்த பூக்களையும்
இரத்த நாற்றம்
வீசவைத்துவிட்டாய்...

தமிழ் மண்ணை
அமிலங்களால் உமிழ்ந்துவிட்டாய்...
குளங்களை கூட
குருதிகளால் நிரப்பி விட்டாய்...
இறுதியாக
அணுகுண்டை வீசி பள்ளி
குழந்தைகளையும்
கொன்று குவித்துவிட்டாய்...
அடுத்து
வேறென்ன
சாதனை செய்ய
வெறி பிடித்து
காத்துக்கொண்டிருக்கிறாய்...

உன் மனநிறைவுக்கு
மண்ணையும் பிடித்துகொண்டாய்...
தமிழனை மண்டியிட
மல்லுகட்டுகிறாய்...
பூமாலையை எடுத்து
குரங்கு கையில் கொடுத்துவிட்டாய்....
தமிழனை அழிக்க தமிழனையே
ஆயுதமாக்கி விட்டாய் ...

தமிழின மக்களையும்
அகதிகளாக்கி விட்டாய்
அவர்களின்
வாழ்க்கையை அதோகதி ஆக்கிவிட்டாய்...

தமிழனை
ஆள விடாமல்தான்
தடுக்கிறாய்...
அவனை
அங்கு
வாழயாவது விடு...

தமிழனை
அசைக்கக்கூட
முடியாத நீ
அழிக்க முயல்கிறாயே
உனக்கேன்
இந்த வீண்முயற்சி?

எந்தமிழின
மக்களை
பதுங்கு குழிகளில்
உறங்க வைத்துவிட்டாய்...
பரவாயில்லை
' புலி '
எப்போதுமே
பதுங்கித்தானே
பாயும்...

தமிழன்
வீழ்ந்து விட்டானென
வீராப்பாய்
இருந்து விடாதே...

அது வீழ்ச்சியல்ல
அவன் விதைக்க படும்
தருணம்...

அறுவடை செய்ய
'முப்படையுடன்'
வருவான்
முன்னச்செரிக்கையாய்
இருந்துக்கொள்.

கதிரவனை கூட
கிரகணம் சிலமணி நிமிடங்கள்
ஆக்கிரமிக்க கூடும்...
அதனால்
கதிரவன்
காணாமல் போய்விடுமா?
நீ
கிரகணமாய் இருந்தால்
பரவாயில்லை
மன்னித்துவிடலாம்
உனக்க
கிரகமே
சரியில்லை
கொஞ்சம்
கவனமாய் இரு ...

கடலலை
வந்துவந்தான் போகும்
ஆனால்
ஆழி பேரலை வந்தால்
போய்விடும்
எல்லாமே
புரிந்து கொள்...
தமிழ்கடலை
கொந்தளிக்க வைக்காதே
தாங்கமாட்டாய்...

விரைவில்
விடியல் வந்துவிடும்
கனவும் கலைந்துவிடும்
உன்கதையும்
முடிந்துவிடும்!
- இமலாதித்தன்(பாலாஜி)

கருத்துகள் இல்லை: