வெள்ளி, 6 நவம்பர், 2009

ஈழம் வெல்லும்

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் நண்பர்களே.

எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் ஓர் விலை எல்லோரும் ஓர் நிறை.

யாதும் ஊரே யாவரும் கேளிர்.


எங்கள் நாட்டில்
எல்லா திசைகளில் இருந்தும்
கடல், அலைகளை
அள்ளி வருகிறது-ஆனால்
தென் திசை கடல்
மட்டும் அகதிகளை
அள்ளி வருகிறது.
பஞ்சாபிலிருந்து வந்தால்
"பஞ்சாபி"
ராஜஸ்தானிலிருந
்து வந்தால்
"ராஜஸ்தானி"
கேரளத்திலிருந்து வந்தால்
"மலையாளி"
பாகிஸ்தானில் இருந்து வந்தால் கூட
அவன் "பாகிஸ்தானி"
ஈழத்திலிருந்து வந்தால் மட்டும்
ஏனடா "அகதி" .
தமிழா திருந்து!
தமிழ் ஈழம் மட்டுமே
இந்த வலிகளுக்கெல்லாம்
மருந்து!!!!!

கருத்துகள் இல்லை: