திங்கள், 12 அக்டோபர், 2009

பிரியமான தோழி ..

ஒவ்வொரு காலையும்
சோம்பல் முறிக்கையில்
கடந்த கால நினைவுகள்
என் கால்களை இடறும்..!!

கால்களை உதறி
நிகழ் காலத்தில் பிரவேசிக்க,
மீண்டும் பிடித்திழுத்து
வல் வளைப்பு செய்யும்...!!

எதிர்கால கனவுகள் போல்,
கடந்தகால நினைவுகள்
ஒன்றும் பாசமானவையல்லவே...

அவற்றின் பயங்கரத்தில்
என் பாசமான கனவுகள்
துகிலாய் உரியப்பட,
நிகழ்காலமும் நரகமாகும்..!!

நரகத்திலிருந்து எழுதுகிறேன்
இந்த வரிகளை,
இறந்த கால நினைவுகளை
முறித்து முறிவு வைத்தியம்,
செய்ய யாராகினும் வாருங்களென்று..!!

கருத்துகள் இல்லை: