திங்கள், 2 நவம்பர், 2009

எழும் ஈழம் .... தமிழ் ஈழம் ........

அடங்க மறு,,
அத்து மீறு ,
திமிரி எழு,
திருப்பி அடி .....

அண்ணலே இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல ..
சீறி பாயும் சிங்கமடா ^^^

சாதியும்,சாதிஇன் இழிவையும் ..
துடைத்தெரிய போராடாமல் ,
இருப்பதை விட .......
செத்து ஒழிவதே மேலானது ...
புரட்சியாளர் ---டாக்டர் அம்பேத்கர் ........


ஈழத்திலே ஒரு தலைவன் ,
தமிழகத்திலே ஒரு தலைவன் ,
இருவருமே ஒருவனடா
மானமுள்ள தமிழனடா ....
-- பாவலர் - அறிவுமதி


உணர்வுகள்
-----------------
உயிரை இழந்தோம்
உடலை இழந்தோம்
உணர்வை இழக்கலமா ?

உணர்வைகொடுத்து..
உயிராய் வளர்த்த
கனவை மறக்கலாமா ?..

தோல்வி நிலையென நீ நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா ?..

யுட்தங்கள் தோன்றட்டும் ..
ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா ?...
ரத்தத்தில் ரத்தத்தில் அட்சங்கள் வேகட்டும் ..
கொள்கை மாறலாமா ?

உடல் முழுவதும் வீரம்
பின் ஏன் கண்ணின் ஓரம் ஈரம் ...

விடியலுக்கு இல்லை தூரம்
இனியும் மனதில் ஏன் பாரம் ..........................
வாசிக்க கிடைக்காத வரலாருகளைத் தின்று செரித்து ..
நின்று சிரிக்கும் நிஜம் ......

நிறந்தரம்
------------
நேற்று என்பது உடைந்த பானை
நாளை என்பது மதில் மேல் பூனை
இன்று மட்டுமே உன் கையில் கிடைத்த வீணை .............


செயல்படுவதற்கு முன் சிந்தனை செய் ....
செய்து விட்டு சிந்திக்காதே ......

இனிதே கிடைக்கும் இன்பத்தை விட ..
போறாடி தோற்கும் வலி திடமானது .......

வெற்றி என்பது எளிதல்ல ..
தோல்வி என்பது நிலையல்ல .....

போதை அற்று வாழ் .. ஆனால்
பேதை அற்று வாழதே ................

நட்பின் நினைவலைகள்
------------------------
ஓடிவிளையாடிய பொழுதை
மறக்கமுடியுமா ?
வீட்டு பாடம் செய்யாமல் முட்டி போட்டதை
மறக்க முடியுமா ?
கால் கடுக்க மிதிவண்டி மிதித்ததை
மறக்க முடியுமா ?
ஒரு மூடி உணவை சிந்தாமல் சிதறாமல்
பகிர்ந்து கொண்டதை மறக்கமுடயுமா ....
மிதிவண்டி பெல் சத்தம் கேட்டவுடனே
தபால் காரனை கடத்தி
நம் தேர்ச்சி ரகசியத்தை பார்த்ததை மறக்கமுடியுமா ...
ஏனோ மாறிவிட்டது நம் சூழ்நிலைகள் .........
அவசரமான இந்த சூழலில் நம்மை மார்டிகிட்டோம்
பார்த்து பல நாளாகியும் ..பார்த்தவுடன் ஹாய் ......
சந்தித்து வெகு நேரமாகியும் சிந்திக்கிறோம்
வார்த்தைகள் பேச ..
எங்கே போனது நம் இனிமையான ஸ்வாரியசங்கள் ....
எதிர்பார்ப்புகளோடு பெருமூட்சு விடுகிறது
நம் இதயத்தின் சுவாச காற்று..................................
.

கருத்துகள் இல்லை: