திங்கள், 2 நவம்பர், 2009

மாலதி மணியன்

என்னிடம் இருந்த
ஒரு இதயத்தையும்
பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக
ஒரு இதயத்தையே
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில்
யோசித்தது காதல்!
யோசிக்காமல்
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி
இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை
தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை
கனவாக்கியது காதல்!
என் கனவுகளை
இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும்
காதல் வேண்டாம்!
நன்மை தரும்
நட்பைக்கொடு இறைவா!!

mamani: jo:

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!

சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!

எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!

ஆதிகேசன் (AADHI): எப்பொழுதும் பேசுவது உன் பணி
எப்பொழுது நாம் பேசுவோம் இனி !!!

சிந்திக்கும் உன்னை சிலரில் எனக்கு முதல் இடம்
சிலிர்க்க வைக்கும் என் மனதில் ஏன் பதித்தாய் தடம் !!!

கவிக்குயில் என கவிதை பாடி !!!
கணநேரத்தில் வந்துவிட்டாய் எனை நாடி !!
"மாலதி " உன்னை கண்டு !!!
தலை நிமிர செய்து விட்டாய் என்னை இன்று !!!

நாளும் நனைத்திடுவோம் நட்பு மழையில்
ஆனந்தம் கொண்டாடிடுவோம் ஆர்க்குட் அலையில் !!!

தயக்கம் கொண்ட என் இதயம்
"மாலதி " யால் இனி தாங்கும் எதையும் !!!

இனி உன்னை சந்திக்க சிந்திக்க ஒரு தோழன் !!!
ஆதிகேசன் (AADHI): நீ எனக்கு தோழியாக கிடைக்க
நான் ஏது தவம் செய்தேனோ?
கலகலவென நகைக்கும் வயதில்
சலனமில்லாமல் இவ்வளவு சோகமா?

உனக்குள் இருக்கும் சோகத்தை
எனக்குள் இன்றே புதைத்துவிட்டு
கள்ளமின்றிச் சிரித்திட
உல்லாச வானில் பறந்திடு

உன் இலட்சியங்களை நிறைவேற்ற
என்றும் உனக்கு துணையாவேன்
இன்றே விரைந்து புறப்படு
நன்றே நடக்கும் உன்வாழ்வில்

பழையனவற்றை மறந்திடு
புதியதை தேடி விரைந்திடு
சோகத்தை தூக்கி எறிந்திடு
தோழி என் தோளில் தலை சாய்த்திடு

ஆயிரம் உறவுகள் தோன்றியும்
அன்பில்லையே என சலிக்காதே
நட்பைவிட வேறேது இன்பம்
நானிருப்பேன் கலங்காதே


உங்களை சந்திக்க சிந்திக்க ஒருவன் !!!

கருத்துகள் இல்லை: