திங்கள், 2 நவம்பர், 2009

ஆதவன் $$$$$ $$$$$$$

உன்னிடம்
பேசும்போதெல்லாம்
பார்க்கவேண்டும் என்று
தவறாமல் தோன்றும்.
ஆனால்
பார்க்கும் போதெல்லாம்
பேசத் தோன்றுவதில்லை.

உன்னை
அதிகமாய் நேசிக்க
நேரம் தேடுவதனாலேயே
என்னை
நேசிப்பதை
நிறுத்தி விட்டேன்.

மோகம்,
உடலின் செல்கள்
உறங்கும் வரை.
காதல்
உயிர்ப் பறவை
விழித்திருக்கும் வரை.


துளைகள் இல்லா
புல்லாங்குழல்
போல,
காதல் இல்லா வாழ்க்கை !
காற்று இல்லா
புல்லாங்குழலாய்
நீ
இல்லாத நான்

எது இல்லாமலும்
என்னால்
இருக்க இயலும்,
நீ இருந்தால்

மலரும் போதும்
உதிரும் போதும்
சத்தம் போடுவதில்லை
ரோஜாப் பூக்கள்,
நம்
காதலைப் போல.

அடித்துக் கொண்டே இருக்கிறது
என் காதல் காற்று
நீயோ
அதன் முதல் முனை எங்கேயென்று
வினா தொடுக்கிறாய்.
எங்கே தேடுவேன்
வட்டத்தின் மூலையை ?

காதலுக்கு கண்ணில்லை
என்பதெல்லாம் பொய்,
உன்
கண்ணுக்குள் தான்
காதலில்லை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~
மாமு உன்கிட்டதான் ஒண்ணுமே இல்ல வெறும்பய நீ எதுக்கு பொலம்புற ....

(நான் படித்ததில் பிடித்து )

கருத்துகள் இல்லை: